ADDED : ஏப் 01, 2016 02:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஆபத்து காலத்திலும், தீமை நேர்ந்த போதும் அதை தடுக்க முன்வருபவனே நல்ல நண்பன் ஆவான்.
* போதும் என்னும் மனம் படைத்தவன் வாழ்வில் துன்பத்திற்கு இடம் இருப்பதில்லை.
* கற்ற நல்ல விஷயத்தை வாழ்வில் பின்பற்றாவிட்டால் கல்வி கற்றும் பயனில்லாமல் போகும்.
* செல்வத்தால் ஆணவம் வரக்கூடாது. தாமரை இலை தண்ணீர் போல செல்வம் நிலையில்லாததாகும்.
* உண்மை வழியில் நடக்கும் நல்லவர்களின் உபதேசத்தைக் கேட்பது இனிமை தரும்.
* பிறர் துன்பம் கண்டு இரங்குவோரைக் கண்டால் வானுலகில் வாழும் தேவர்களும் வணங்குவர்.
- ஜெயேந்திரர்